நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (01/02/2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








