ஜனவரி மாத தொடக்கம் முதல் இதுவரை இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை14 லட்சத்தை கடந்துள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி 01 – ஒகஸ்ட் 09 வரை மொத்தம் 1,408,620 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் ஒகஸ்ட் 09 வரை மாத்திரம்`65,202` பேர் வருகை தந்துள்ளனர்.
2026-ல் இதுவரை அதிகமாக வந்த நாடுகளில் இந்தியா முதலிடத்திலும் (351,713 பேர்) இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் (137,861 பேர்) சீனா மூன்றாவது இடத்திலும் (92,940 பேர்) உள்ளது.
இதேநேரம் இவ்வாண்டில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்த மாதம் பெப்ரவரி (279,328 பேர்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.






