கடன் பத்திரம் Letters of Credit மூலம் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் இறுதி சுங்க அனுமதி மறுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு பரிந்துரைக்கும் வகையில் இலங்கை சுங்கத் திணைக்களம் சிறப்பு குழு ஒன்றை நியமித்துள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவ இந்த குழு தொடர்பான நியமனத்தை உறுதிப்படுத்தினார்.

இந்த இறக்குமதிகள் தொடர்பான பிரச்சினைகளை மீளாய்வு செய்து, பொருத்தமான தீர்வு ஒன்றை முன்மொழிவதே இந்த குழுவின் பணியாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here