யாழ்பாணத்தில் இருந்து கல்முனைக்கும் மற்றும் வாழச்சேனையில் இருந்து இருந்து பொத்துவில் நோக்கி பிரயாணித்த இரு இலங்கை போக்குவரத்து பேருந்துகள் மீது வாழைச்சேனை சுங்கான்கேணி 18 வது மையில் பிரதேசத்தில் இனம் தெரியாதோரினால் கல்வீச்சு தாக்குதலால் இரு பேருந்துகள் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்த சம்பவம் புதன்கிழமை (15/1/2025) இரவு 07.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பேருந்துகள் வழமைபோல போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கான்கேணி பிரதேசத்தில் சம்பவதினமான இரவு 07.30 மணியளில் இனம் தெரியாதோரினால் பேருந்துகள் மீது தீடிரென கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டதையடுத்து பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்ததுடன் பிரயாணிகள் தெய்வாதீனமாக உயர் தப்பியதுடன் எவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை .
இதனையடுத்து பேருந்துகள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பிரயாணிகளை வேறு பேருந்துகளில் மாற்றி ஏற்றி அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








