உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நிறுத்தம் எதிர்வரும் வாரங்களில் ஒப்புக் கொள்ளப்படலாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் போர் நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, போர் அடுத்த சில வாரங்களுக்குள் முடிவடையும் என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டதாகத் தெரிவித்த இம்மானுவேல் மெக்ரோன் யுக்ரைனுக்கான எந்தவொரு அமைதி காக்கும் ஒப்பந்தத்தின் செலவு மற்றும் சுமையை ஐரோப்பா ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யுக்ரைனில் எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் யுக்ரைன் சரணடைவதாக இருக்கக்கூடாது எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.








