தேசிய மக்கள் படை ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதார எதிர்காலத்தில் பலமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக நாட்டின் முன்னணி வர்த்தக சஞ்சிகையான LMD இன் ஜனவரி மாத இதழ் வெளிப்படுத்தியுள்ளது.
எல்எம்டியின் ஜனவரி இதழில் குறிப்பிட்டுள்ளபடி, டிசம்பர் மாதத்தில் வணிக நம்பிக்கைக் குறியீடு 174 அலகுகளாக உயர்ந்துள்ளது. இது நவம்பரில் 154 அலகுகளாக இருந்தது.
ஐந்து வருடங்களின் பின்னர் ஜனவரி மாதத்தில் பதிவான அதிகூடிய பெறுமதியை குறித்த சுட்டெண் எட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.








