ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் மற்றும் 1200 க்கும் மேற்பட்ட மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (01.08) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மூன்று இலட்சம் ரூபாவுக்கு மேல் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த தயாசிறி ஜயசேகர, “அரகலய” போராட்டத்தின் போது வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு மூன்று முதல் நான்கு கோடி வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.








