Tuesday, April 21, 2026
No menu items!

தயாசிறி ஜயசேகர

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் – விசாரணைக்குழுவிற்கு எதிர்க்கட்சியிலிருந்து நான்கு உறுப்பினர்கள் நியமனம்!

சுங்கச் சோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றம் நியமிக்கும் விசேட குழுவிற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், தயாசிறி ஜயசேகர, மற்றும் இராசமாணிக்கம் இராசபுத்திரன் சாணக்கியன் ஆகியோர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இந்த நான்கு பேரின்...

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சி அழுத்தம்!

பத்து ஆண்டுகளாக நடத்தப்படாத மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையில் இதுகுறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாததால் பல மாகாண சபைகள் செயலிழந்துள்ளன. இதனை விரைவில் நடத்த...

CID யில் முன்னிலையாகிய தயாசிறி ஜயசேகர!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை முன்னிலையாகியுள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தயாசிறி ஜயசேகர நடத்தை தொடர்பில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக விசாரணை செய்ய மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார். கடந்த , மே 20ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தயாசிறி ஜயசேகரவின் நடத்தைக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில்  சபாநாயகர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். விசாரணைக் குழுவின் தலைவராக குழுக்களின்...

எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் – தயாசிறி ஜயசேகர வலியுறுத்தல்..!

“அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதால் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்போது சாதாரணமாகிவிட்டது. ஆகவே எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று (20) ஒழுங்கு விதிப் பிரச்சினையை முன்வைத்தே இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “பாதாளக்...

இந்தியா – சீனா உடன்படிக்கைகளை சபையில் முன்வைக்க வேண்டும் – தயாசிறி ஜயசேகர!

வெளிநாடுகளுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொள்ளும் உடன்படிக்கைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்காது இருப்பதன் ஊடாக அது தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும். அதனால் இந்தியா மற்றும் சீனாவுடன் செய்துகொண்டுள்ள உடன்படிக்கைகள் தொடர்பான தகவல்களை சபைக்கு முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால் அதற்கு பொறுப்பு சபாநாயகர்; MP.தயாசிறி!

நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் இருப்பதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது கொலை செய்யப்பட்டால், அதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதாவது நடந்தால், சபாநாயகர் தான் பொறுப்பேற்க வேண்டும்....

எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் – நளிந்த ஜயதிஸ்ஸ..!!

எதிர்காலத்தில் எரிபொருளுக்கான வரி குறைக்கப்படும் என ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வாய்மொழி மூல கேள்வி பதிலுக்கான நேரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உரிய முறையில் வரிக்குறைப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றோம். தற்போது வழங்கப்படக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளோம். இந்த நிலையில்...

தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டு..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டதாக  தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே துமிந்த திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

திருப்பி அனுப்பப்பட்ட அரச வாகனங்களை ஏலம் விடுமாறு வலியுறுத்தல்…!

புதிய அரசாங்கம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ள அரச வாகனங்களை ஏலத்தில் வைத்து, அதனை காட்சிப் பொருளாக மாற்றி பொதுமக்களை ஏமாற்றுவதை விடுத்து, திறைசேரிக்கு பணத்தை பயன்படுத்துமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த பொது வாகன தரிப்பிடத்தில் வைக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான அரச வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img