அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக  நேற்றையதினம் (22) நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ரஞ்சித் மத்துமபண்டார,

“உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் எதிர்கட்சிகளுக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தினை விளைவிக்ககூடியது.

மேலும் இந்த சட்டமூலம் நாட்டில் பயங்கரவாதம் நிலவாத ஒரு காலப்பகுதியிலும் தேர்தல் காலப்பகுதியிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்று தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்பதோடு குறித்த சட்டமூலத்தை பயன்படுத்தி எவரையும் கைது செய்யவும் முடியும்.

அத்துடன், தேர்தல் நேரத்தில் கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவும் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்காகவுமே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here