உயர்தர எழுத்துப் பரீட்சைகளுக்கு தோற்றிய பரீட்சார்த்திகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த அட்டவணைக்கமைய, நடனம் (கீழைத்தேய மற்றும் பரதம்), சங்கீதம் (கீழைத்தேய, கர்நாடக மற்றும் மேலைத்தேய) மற்றும் நாடகமும் அரங்கியலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள் 2026 செப்டம்பர் 24 முதல் ஒக்டோபர் 3 வரை நடைபெறும்.

பொறியியல் தொழில்நுட்பத்திற்கான செய்முறைப் பரீட்சை செப்டம்பர் 30 முதல் ஒக்டோபர் 10 வரையிலும், மனைப் பொருளியல் ஒக்டோபர் 10 முதல் ஒக்டோபர் 20 வரையிலும் நடைபெறும். உயிர் முறைமைகள் தொழில்நுட்ப செய்முறைப் பரீட்சைகள் ஒக்டோபர் 17 முதல் ஒக்டோபர் 21 வரை திட்டமிடப்பட்டுள்ளன.

பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்படும் எனவும், தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அவர்களின் விண்ணப்பங்களில் வழங்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுமதி அட்டைகள் கிடைக்கும் எனவும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், செய்முறைப் பரீட்சைகள் தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பிருந்து திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பரீட்சார்த்திகள் அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்கு, பரீட்சைகள் திணைக்களத்தை 1911 என்ற ஹொட்லைன் இலக்கம் மூலமாகவோ அல்லது 0112785922, 0112784537, 0112786616 மற்றும் 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். அத்துடன் விசாரணைகளை gcealexam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here