மஸ்கெலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்மோர் பிரதேசத்தில் உள்ள கல்கந்த தனியார் தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, அதற்கு மேலே அமைந்துள்ள தோட்ட வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் பெய்த கடும் மழையுடன் மௌஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்திற்கு மேலே அமைந்துள்ள இந்த தேயிலைத் தோட்டத்தின் பெரும்பகுதி இவ்வாறு சரிந்துள்ளதுடன், அதனுடன் தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியும் முற்றாக மண் மற்றும் கற்களுக்குள் புதைந்துள்ளது.

போக்குவரத்து வீதிகள் தடைப்பட்டுள்ளதால் தோட்டத்திற்குள் நுழைவதற்கு வேறு மாற்று வீதி இல்லாத நிலையில் அங்கு வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ள வீடுகளில் வசிக்கும் குடும்பங்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புமாறு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சரத் புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலும், இந்த மண்சரிவு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(கோப்பு படம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here