கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு, எப்பாவல பொஸ்பேட் வைப்புத்தொகையை சிங்கிள் சுப்பர் பாஸ்பேட் உற்பத்திக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், தற்போது அந்த பொஸ்பேட் வைப்பு இலங்கையில் உள்ள உர உற்பத்தியாளர்களுக்கு மூலப்பொருளாக வழங்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எப்பாவல பொஸ்பேட் வைப்புத்தொகையானது 500 ஏக்கரில் பரவியுள்ளது.. அந்த பொஸ்பேட் வைப்புகளை வினைத்திறனாக பயன்படுத்துவதன் மூலம் நாட்டிற்குள்ளேயே சிங்கிள் சுப்பர் பாஸ்பேட் உற்பத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதுடன், அவற்றை இறக்குமதி செய்வதன் மூலமும் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, முதலீட்டாளர் ஊடாக அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.






