Wednesday, June 10, 2026
No menu items!

உர மானியம்

உர மானியம் தொடர்பில் விவசாயிகளுக்கு எச்சரிக்கை.!!

உர மானியங்களைப் பெற்ற பிறகு தங்கள் வயல்களில் பயிரிடத் தவறும் விவசாயிகளிடமிருந்து அரசாங்கம் நிதியைத் திரும்பப் பெறும் என்று விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார். அடுத்த சாகுபடி பருவத்திற்கான மானியங்கள் வழங்கப்படும்போது அத்தகைய விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை தானாகவே கழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த...

தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு QR குறியீட்டு முறை மூலம் உர மானியம் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கும் புதிய திட்டம் இன்று (அக்டோபர் 1) முதல் அமுலுக்கு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, பயனாளிகள் தங்களுக்கான QR குறியீட்டை தயாரித்து, தேசிய உரச் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட உர நிறுவனங்களிடம் வழங்கி, மானியத்துடன் உரத்தைப் பெற முடியும். மாநாட்டின்...

உர மானியத்தை விரைவில் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை!

சிறுபோக நெற்செய்கைக்குத் தேவையான உர மானியம் தாமதமாகி வருவதால், விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக உர மானியத்தை விரைவில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாறை உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் தற்போது சிறுபோகத்திற்கான நெற்செய்கையினை ஆரம்பித்துள்ளனர். அறுவடை செய்வதற்கு சுமார் 10 முதல் 15 நாட்கள் ஆகும் எனவும், இந்த...

அனைத்து பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானம் – ஜனாதிபதி..!

இந்த வருடம் வயல்களில் பயிரிடப்படும் ஏனைய பயிர்களுக்கும் உர மானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இதுவரை நெற்பயிர்களுக்கு மாத்திரம் உர மானியம் வழங்கப்பட்டது. வயலில் விளையும் ஏனைய...

தென்னை தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கை!

தென்னை தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியங்களை இந்த மாத இறுதி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். இதற்காக ரூ.5,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700...

விவசாயிகளின் உர மானியத்துக்கான பணத்தில் மோசடி – நாமல் கருணாரத்ன..!

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உர மானியத்துக்கான பணத்தை சில விவசாயிகள் பெறவில்லை என்றும், அந்தப் பணம் திருடப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (3/18/2025) பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரட்ண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அநுராதபுரம்...

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்க திட்டம்..!

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது. இதன்படி, 05 ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது. ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெற்றிக் தொன் எம்.ஓ.பி உரத்தில் 27,500 மெற்றிக் தொன் உரத்தை பயன்படுத்தி 56,000 மெற்றிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கலப்பு உரத்தை 4,000 ரூபா மானிய விலையில்...

அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்திய சஜித்!

மக்களின் நலனுக்கான ஆட்சியை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கு போதிய தெளிவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருநாகல், கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விவசாயிகளுக்கான 25,000 ரூபாய் உர மானியம் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை. இன்னும் இதற்காக...

விவசாயிகளுக்கான உர மானியம் தொடர்பில் சபையில் கேள்வி – தீர்வு எட்டப்பட்டதா?

பெரும்போகத்திற்காக உர மானியமாக 25,000 ரூபா மற்றும் இலவச சிவப்பு தூள் உரத்தை விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ”விவசாயிகளுக்கு உர மானியங்களை வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உர மானியம்...

பெரும் சிரமத்தில் விவசாயிகள் – உர மானியம் வழங்குமாறு அரசிடம் கோரிக்கை..!

விதை உருளைக்கிழங்கு, உரம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக வெலிமடை மற்றும் ஊவாபரணகம பிரதேச விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தமக்கு உர மானியம் வழங்குமாறு அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், உருளைக்கிழங்கு செய்கையில் பரவி வரும் நோய்த் தொற்று காரணமாகப் பயிர்கள் அழியும் அபாயம் உள்ளதாகவும் வெலிமடை மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

இந்தியப் பிரதமரின் வரலாற்று சாதனை; ஜனாதிபதி வாழ்த்து

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்று வரலாறு படைத்துள்ளார். இன்று ஜூன் பத்துடன், அவர்...
- Advertisement -spot_img