உலகில் உயிர் வாழ்ந்து வந்த வயதானவரான ஸ்பெயினின் பிரன்யாஸ் மொரேரா தனது 117 ஆவது வயதில் காலமானார்.

கடந்த இரண்டு தசாப்தமாக வடகிழக்கு ஸ்பெயினின் ஒலோட் நகரில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் வாழ்ந்து வந்த அவர் மரணித்ததை அவரது குடும்பத்தினர் நேற்று (20) உறுதி செய்துள்ளனர். பிரான்சின் லுசிலே ரன்டன் 118 வயதில் மரணித்ததை அடுத்தே, உலகின் வயதானவராக மொரேரா கடந்த 2023 ஜனவரி மாதம் கின்னஸ் சாதனை புத்தகத்தால் அறிவிக்கப்பட்டார். 1907 ஆம் ஆண்டு மார்ச் நான்காம் திகதி அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோவில் பிறந்த மொரேரா, முதலாம் உலகப் போருக்கு மத்தியில் 1915 ஆம் ஆண்டு ஸ்பெயினுக்கு திரும்பியுள்ளார்.

மூன்று குழந்தைகளின் தாயான அவரின் ஒரு குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருப்பதோடு அவருக்கு 11 பேரக் குழந்தைகள் மற்றும் பல கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர். மொரேராவின் மரணத்தை அடுத்து 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி பிறந்து தற்போது 116 வயதுடைய ஜப்பானின் டொமிகோ இடூகா உலகின் வயதானவராக பதிவாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here