ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது.
இதற்கமைய இன்று (11) காலை நிலவரப்படி, உலக சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரென்ட் வகை எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை அமெரிக்க டொலர் 108 ஐ கடந்துள்ளது
கடந்த ஜூலை 24 ஆம் திகதிக்குப் பிறகு, கடந்த 9 ஆம் திகதி பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலரை கடந்தது. அதன் பின்னர் தொடர்ந்து எண்ணெய் விலை இவ்வாறு அதிகரித்து வருகிறது.
பிரென்ட் எண்ணெய் விலை அதிகரிப்புடன், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலையும் டொலர் 103.34 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மர்பன் (Murban) வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை டொலர் 122.48 ஆக பதிவாகியுள்ளது.







