பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொய் சாட்சி வழங்கிய ஒரு சாட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர்  நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பாலித கமகே என்ற சாட்சி காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலத்திற்கு முரணாக சாட்சி வழங்குவதாக துணை சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார  நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதற்கமைய, இந்த சாட்சிக்கு எதிராக பொய் சாட்சி வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அதன் பின்னர், அந்த சாட்சியை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here