சர்வதேச சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை அதிகரித்துதுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக பொருளாதார போரை ஆரம்பிப்போம் என எச்சரித்தமை, ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடனான வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுத்தமை ஆகியன இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரென்ட் வகை மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 94 அமெரிக்க டொலர்களாகவும், WTI வகை எரிபொருள் ஒரு பீப்பாயின் விலை 87 அமெரிக்க டொலர்களாகவும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.








