நிகவெரட்டிய – மானபாய பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நிகவெரட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிகவெரட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் 36 வயதுடைய விஹாரகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிகவெரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here