எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய (SJB) சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடத் தொடங்கியுள்ளதாக கட்சியின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வி தகைமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எதிர்ப்புக்களும் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதனையடுத்து, குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். இதேவேளை, எதிர்கட்சிகள் அனைத்தும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.








