கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 2டி மற்றும் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து சூர்யாவின் 44ஆவது திரைப்படத்தை தயாரிக்கின்றன.
பீரியாடிக் கேங்க்ஸ்டர் மற்றும் காதலை பின்னணியாக் கொண்டு இத் திரைப்படம் உருவாகவுள்ளது.
இத் திரைப்படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதில் சூர்யாகவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இந்நிலையில் திரைத்துறையில் 27 வருடங்களை நிறைவு செய்துள்ளார் சூர்யா.
இதனைக் கொண்டாடும் விதமாக சூர்யா 44 படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.








