நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பீ.திசாநாயக்க, 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

ஹங்குராங்கெத்த ரிகல்லகஸ்கட – ஜெயபிம கனிஷ்ட பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை செலுத்தினார்.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளருமான  அங்கஜன் இராமநாதன் தனது வாக்கினை அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை பதிவு செய்தார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே, 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

நாவலப்பிட்டி – குருந்துவத்த எம்.எஸ்.அளுத்கமகே தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, தனது வாக்கினை காலை 09.00 மணிக்கு  செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here