தனமல்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்வெவ கந்த பிரதேசத்தில் அதிகளவில் பயிரிடப்பட்டு வந்த 03 கஞ்சா தோட்டங்களுக்கு உரிமையானவர்கள் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை தளபதியின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைய அம்பாந்தோட்டை பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சில்வாவின் பணிப்புரையின் கீழ் விசேட அதிரடிப்படை உடவளவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, அதிகாரிகள் குழுவொன்று தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெவ கந்த பிரதேசத்தில் மூன்று இடங்களில் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு 20 பேர்ச்சஸ், 05 பேர்ச்சஸ், 20 பேர்ச்சஸ் ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக நடப்பட்ட சுமார் 12,000 கஞ்சா செடிகளை கொண்ட 03 தோட்ட உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டு 30 கஞ்சா செடிகள் மேலதிக விசாரணைகளுக்காக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஞ்சியிருந்த கஞ்சா செடிகள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here