Sunday, May 3, 2026
No menu items!

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

மூளாய் பகுதியில் இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மேலும் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். நேற்றையதினம் மூளாய் பகுதி மக்கள் இணைந்து யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வட்டுக்கோட்டை  பொலிஸ் நிலைய...

ஐந்து உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. இடமாற்றப்பட்டவர்களில், எல்.எம்.எஸ். பண்டார குருநாகல் பிரிவுக்கு, ஏ.ஜி.யூ.சி. ஹேரத் தலைமையக நிர்வாகத்திற்கு, எஸ்.பி.கே. கால்லகே நலன்புரி பிரிவுக்கு, ஐ.சி.யூ.ஐ. கந்தேவத்த தம்புத்தேகம பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், பொலிஸ் அத்தியட்சகர் கே.டபிள்யூ.ஜி. துஷரசேன...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய விசேட குழு நியமிப்பு!

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 67,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஆய்வுசெய்ய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்டவின் தலைமையில் நால்வர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார். மேலும், இந்த குழு...

புத்தாண்டை முன்னிட்டு வி​சேட பாதுகாப்பு திட்டம் – 35,000 பொலிஸார் கடமையில்..!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வி​சேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 35,000இற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். குறிப்பாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில், சிவில் உடையில் புலனாய்வு பிரிவு...

பதவியை இராஜினாமா செய்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட கடிதத்தை பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய  சிவப்பு அறிவிப்பு!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் துபாயில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார் இந்த மூன்று நபர்களும் இந்த வாரம்...

குற்றத்தடுப்பு வேலைத்திட்டத்தின் மூலம் 4,020 நபர்கள் கைது!

13 நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட குற்றத்தடுப்பு வேலைத்திட்டத்தின் மூலம் 4,020 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி குற்றத்தடுப்பு விசேட வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள சாலைத் தடைகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள்...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடை நீக்கம்..!

வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்ற மிதிகம பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 31.12.2012 அன்று மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றபோது வெளிநாட்டு பெண் ஒருவரிடம் 5 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் இந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விக்கும் கினிகே அவர்களினால் பணி இடை...

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் சிலர் இடமாற்றம்!

தேசிய 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் களமிறக்கப்பட்டுள்ள 45,000 பொலிஸார்..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இன்று (24.12.2024) விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பிற்காக 6500 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். சிவில் உடையில் சுமார் 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஏனைய நகரங்களில் பாதுகாப்புக்காக 45,000...
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு ?

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு (SSCL) மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்தமை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும்...
- Advertisement -spot_img