டிசம்பர் மாத சமையல் எரிவாயுவின் விலை  திருத்தம் தொடர்பில் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் தற்போது நிலவும் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு இந்த ஆண்டு எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ப இந்த நாட்டில் எரிவாயு விலையில் அதிகரிப்பு ஏற்பட வேண்டும் எனவும், ஆனால் எரிவாயுவின் விலையை ஸ்திரமான நிலையில் பேணுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான முன்மொழிவுகள் நிதியமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்படவில்லை மற்றும் கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here