ஏறாவூர் புன்னக்குடா வீதியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்தில் ஏறாவூர் தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.







