ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாத்திரம் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்து தீ விபத்து சம்பவங்களில் மொத்தம் 17 மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 382 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அவற்றில் 46 மீட்பு நடவடிக்கைகள்  பதிவாகியிருந்தன.

எனினும், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலத்திற்குள் கொழும்பு மாவட்டத்தில் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவானமை கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும் என தீயணைப்பு சேவைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் தீயணைப்பு சேவைகள் திணைக்களத்திற்கு 13 அவசர அழைப்புகள் கிடைத்துள்ளன. அவற்றில் வீதி தடைகள், மரங்கள் முறிந்து விழுதல், வாகன விபத்துக்கள் காரணமாக ஏற்படும் மீட்பு நடவடிக்கைகளும் அடங்கும் என் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களாக, பல்வேறு வேலைத்தளங்களில் தீ பாதுகாப்பு முன் நடவடிக்கைகள் இல்லாமை, அவசர பதிலளிப்பில் ஈடுபடாமை, வீடுகள் மற்றும் வேலைத்தளங்களில் பாதுகாப்பற்ற மின்சார பயன்பாடு மற்றும் வறண்ட வானிலை நிலைமைகள் ஆகியவை தாக்கம் செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here