கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு, ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை தரம் 6 இல் சேர்க்கும் புதிய சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளது.
இந்தச் சுற்றுநிருபம், மாணவர்கள் தரம் 6 இற்கு சேர்க்கப்படுவதற்கான அனைத்து நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களை விரிவாக உள்ளடக்கியுள்ளது.
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தச் சுற்றுநிருபத்தை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.moe.gov.lk மூலம் இலவசமாகப் பெறலாம்.
இதன் மூலம் மாணவர்களின் தரம் 6 சேர்க்கை செயல்முறை மேலும் தெளிவானதும், சீரற்றதும் ஆகும் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.








