ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை அதிபர் கொடூரமாகத் தாக்கியதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 15 ஆம் திகதி அன்று பாடசாலை நேரத்திற்கு பின்னர் பிரத்தியேக வகுப்புகள் நடைபெற்றன.

இதன் போது அன்றைய தினம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இடைவேளையின் போது ​​கழிப்பறைக்குச் சென்ற பல குழந்தைகள் தண்ணீரில் விளையாடியதாக வகுப்பு ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மறுநாள் 16.05.2025 அன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் பாடசாலை அதிபர் தனது கையில் மூன்று பிரம்புகளை எடுத்து ஒன்பது குழந்தைகளையும் வரவழைத்து முழங்காலில் நிற்க வைத்து அவர்களின் கைகளை சுவரில் வைத்து முதுகில் கொடூரமாக அடித்துள்ளார்.

பின்னர் வீடு திரும்பிய பாதிக்கப்பட்ட பிள்ளைகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பிள்ளைகளை பரிசோதித்தபோது ​​அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி நிறைந்த காயம் உள்ள பகுதிகளை அடையாளம் காண முடிந்தது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்கள் கல்வி அலுவலகத்தில் முறைப்பாடு மேற்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தபோது ​​அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் குழு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தது.

எனினும் இன்று சிறுவர் மறுவாழ்வு மையம், அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இந்த பிள்ளைகள் மீதான தாக்குதல்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.

இதே வேளை அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் இந்த தாக்குதல் குறித்து கல்வி அலுவலகம் உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here