வட இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இமாச்சல பிரதேச தலைநகரான ஷிம்லாவில் இருந்து சுமார் 393 கி.மீ வடக்கே அமைந்துள்ள சம்பா மாவட்டத்தின் மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 18 பேர் இருந்ததாக இந்திய ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கனமழை காரணமாக மாநிலத்தில் 185 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here