கொழும்பு , முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  கல்வல சந்திக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (01.02.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக  முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்துவாரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார்.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here