அம்பாறை மாவட்டம் கல்முனை புலனாய்வு பிரிவினரால் நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் வைத்து விநியோகம் செய்து வந்த சந்தேக நபரை சாய்ந்தமருது பிரதான வீதியில் வைத்து நேற்று (03.09) சுமார் 450,000 ரூபா பெறுமதியுடைய ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சம்மாந்துறை பகுதியில் உள்ள கல்வித் திணைக்களத்தில் பணிபுரிவதுடன் ஐஸ் போதைப்பொருளை சாய்ந்தமருது உட்பட கல்முனைக்கு நீண்ட காலமாக விநியோகித்து வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
25 கிராம் ஐஸ் போதைப்பொருளினை பைகளில் உறையிடப்பட்டு விற்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளுடன் கைப்பற்றி குறித்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








