ஐ.பி.எல் தொடரின் 70 வது போட்டியில் ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜயன்ஸ்ட் அணிகள் மோதியிருந்தன.
இந்த தொடர் நேற்றைய தினம்(27.05) லக்னோவில் நடைபெற்றது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்களை பெற்றது.
இதையடுத்து களமிறங்கிய ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்ற ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறியது.
பெங்களூரு அணி மொத்தமுள்ள 14 போட்டிகளில், அதன் 7 AWAY போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோயல் சலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணியானது ஐ.பி.எல் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு தொடரின் தனது அனைத்து AWAY GAMES போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது .








