அடுத்த ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதியை ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி, பெப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் 10ஆம் திகதியும் ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் 9ஆம் திகதியும் மற்றும் ஆகஸ்ட் 7ஆம் திகதியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here