கொழும்பு – கஹதுடுவ பகுதியின் 15 வயது சிறுவன் ஒருவர் கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளை வேனில் கடத்தப்பட்ட குறித்த சிறுவன், இரத்தினபுரியில் வாகனத்திலிருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் 119 காவல்துறையின் அவசர பிரிவுக்கு மேற்கொள்ளப்பட்ட அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, இரத்தினபுரியில் உள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் குறித்த சிறுவனை காவல்துறையினர் தமது பொறுப்பில் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் சிறுவனைக் கடத்த முயன்ற குழுவை அடையாளம் காணும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.








