காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிரதேச கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கியுள்ள நிலையில் இருந்த மர்மப்பொருள் ஒன்றை கண்டெடுத்த நிலையில் அது வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (03/03/2025) மாலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
திருநீற்றுகேணி பிரதேசத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சம்பவதினமான நேற்று மாலை குறித்த கடலில் நீராடச் சென்றனர். இதன்போது அங்கு கரையொதுங்கியிருந்த மர்மபொருள் ஒன்றை கண்டெடுத்து அதன் பகுதியில் இருந்த நூலை இழுத்த நிலையில் அது வெடித்ததில் ஒருவர்படுகாயமடைந்ததையடுத்து அவரை மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த மர்ம பொருளை குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பரிசோதித்ததில் அது வெளிச்ச குண்டு என கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், வெடித்து திதறிய அதன் பாகங்களை மீட்டதுடன்
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








