களுத்துறையில் கடந்த மாதம் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லஸ்ஸ பகுதியில் உள்ள அவர்களது உணவகத்திற்குள் வைத்து கடந்த ஒக்டோபர் 9, அன்று இந்த தம்பதியினர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் சந்தேகநபரை களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று (13) வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த சந்தேகநபர், பின்னர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த இரட்டை கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here