பலாங்கொடையில் பெருமளவு சட்டவிரோத சாராயம் மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று (13) வெள்ளிக்கிழமை மாலை வலேபொட உடகந்த பகுதியில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சோதனையின் போது, 100 போத்தல்களுக்கு சமமான 75 லீற்றர் சட்டவிரோத சாராயம் மற்றும் மூன்று பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த 510 லீற்றர் கோடா ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோத சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here