களுத்துறை – கெலிடோ கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
மரணித்த பெண் 49 வயதுடையவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கைப்பை ஒன்றும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








