ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜைகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23/02/2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் ரஷ்ய பிரஜைகளான 37 வயதுடைய ஆண் மற்றும் 32 வயதுடைய பெண்ணொருவரே மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு படையினர் விரைந்து செயற்பட்டு குறித்த நபர்களை காப்பாற்றியுள்ளனர்.








