கற்பிட்டி கடற்பரப்பின் ஈப்பான்தீவு பகுதியில் கடல்வழியாக நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்கள் சுமார் 160,000 மற்றும் மாத்திரைகள் சுமார் 22,100 என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே ஈபான்தீவு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட டிங்கி படகை சோதனைக்குட்படுத்திய போதே மேற்படி சிகரட்டுக்கள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கற்பிட்டி கடற்பரப்பில் தொடர்ந்து கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட ரோந்து நடவடிக்கைகள் காரணமாகவே இவ்வாறு சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிகரட்டுக்கள் மற்றும் மாத்திரைகள் கை விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரினால் கைப்பற்றப்பட்ட 160,000 சிகரட்டுக்கள் மற்றும் 22,100 மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[கற்பிட்டி நிருபர் – எம்.எச்.எம். சியாஜ்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here