Saturday, April 18, 2026
No menu items!

கடற்படை

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் வழக்கில் – உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முன்னாள் வேட்பாளர் கைது!

நாட்டின் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்ததாவது,   குறித்த நபர் பன்னலவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் தொடர்புடைய கப்பல் பிடிப்பு சம்பவம் நேற்று இடம்பெற்றது. கடற்படை...

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 47 இந்திய மீனவர்கள் கைது!

நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதிகளில், கடற்படையின் வடக்கு மற்றும் வட மத்திய கட்டளைகள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் வந்த ஐந்து படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகள்...

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு ஆழியவளை களப்பு பகுதியில் நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் ஆழியவளை மற்றும் கட்டைக்காட்டு பகுதி முழுவதும் கடற்படையினரால் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆழியவளை களப்பு பகுதியில் 30...

காரைநகர் கசூரினா கடற்கரையில் பரவிய தீ !

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது. இச் சம்பவம் நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த பிரதேச மக்கள் பொலிசாருக்கும் கடற்படையினருக்கும்  தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிசாரும் கடற்படையினரும் பிரதேச சபையினரும்...

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் மீனவர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வரம் மீனவர்களை  எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தரவிட்டார். இராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று நேற்று (29) ஞாயிறு  அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து  கைது செய்யப்பட்ட  ராமேஸ்வர...

தெற்கு கடற்கரையிலிருந்து போதைப்பொருட்கள் கடத்தல்!

தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் கடற்படை கைப்பற்றியுள்ளதாக கூறுகிறது. இதில் 450 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இந்த இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

கடற்கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை!

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் இன்று அதிக காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆலோசனை நாளை (மே 20) காலை 05.30 மணி வரை அமுலில் இருக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கடற்படை...

பல மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு..!

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது,  87 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில்  இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 218 கிலோ, 800  கிராம்  கிராம் கேரள கஞ்சா...

அரபிக்கடல் முழுவதையும்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்திய கடற்படை ..!

ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளதோடு  பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய இராணுவம் முறியடித்து வருகிறது. இந்நிலையில் அரபிக்கடல் முழுவதையும் இந்திய கடற்படை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதோடு  துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்கவும்  இந்திய கடற்படை...

தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த  இரண்டு இளைஞர்கள் மாயம்!

சிலாபம், தெதுரு ஓயாவில் குளித்துக் கொண்டிருந்த 20 மற்றும் 22 வயதுடைய இரண்டு இளைஞர்கள் நேற்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்டை மற்றும் கலகெதர பகுதியைச் சேர்ந்த இந்த இருவரும் நேற்று மாலை காணாமல் போனதாக காவல்துறையினர் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில், இருவரும் நண்பர்கள் குழுவுடன் கண்டியிலிருந்து சிலாபம் பகுதிக்கு ஒரு பொழுதுபோக்குப் பயணமாகச் சென்றிருந்தபோது இந்த...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img