தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர்.
எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பெரஹராவுக்கு முன்னதாக, பாதாள உலக குழுக்கள் தொடர்பான சாத்தியமான மோதல் காரணமாக இந்த சிக்கல் எழுந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த பரிந்துரையை எழுத்து மூலம் வழங்கியுள்ளார்.
இது தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவுக்கு மாத்தறை மாவட்ட செயலாளர் சந்தன திலகரத்ன ஊடாக இன்று இந்த விடயம் (26) அறிவிக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு பிரிவு, அரச புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் விசேட கிளை ஆகியவற்றின் புலனாய்வு அறிக்கைகளின்படி, காவடி நிகழ்வை ஒழுங்கமைக்கும் குழுவினருக்கும் கலைஞர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சமூக ஊடகங்களில் பாதாள உலகத்தினர் தொடர்பான பல்வேறு கூற்றுகள் பரவி வரும் நிலையில், அவை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் தெவிநுவர பெரஹரா திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






