வட மாகாணத்தில் கடல் வளங்களும் பௌதிக வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பான கலந்துரையாடலின் பின் வட மாகாண மீனவ அமைப்புகள் கருத்து தெரிவித்தனர்.

வடமாகணத்தில் கடல் வளங்களும் கடலைச் சூழ உள்ள பகுதிகளில் உள்ள வளங்களும் அழிக்கப்படுவது தொடர்பாக நீண்ட நாட்களாக வடமாகண மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் இவ்விடயங்களை அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

இந்திய மீனவர்களாலும் உள்ளூர் மீனவர்களாலும் எமது கடற் பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை மேற்கொண்டு நமது வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது கடல் தொழில் சட்டங்கள் வரும் எழுத்து மூலம் காணப்படுகின்றன ஒழிய, அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால் எமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக அழிவடைந்து வருகின்றது. அரசியல்வாதிகளும் சுயலாப அரசியல்களையே மேற்கொள்கின்றனர். எமது வாழ்வாதாரத்தில் அவர்கள் கரிசனை செலுத்துவதில்லை.

மன்னார் மாவட்டத்திலே கடல் வளங்கள் அளிக்கப்படுவது காற்றாலை மின்சாரங்களை உருவாக்குதல் தொடர்பாக கடல் வளங்களும் மீன் உற்பத்தியும் குறைந்து வருகின்றது இதனை வடமாகாண ஆளுநர் அவர்களும் ஜனாதிபதி அவர்களும் இவ்வாறு கடல் வளங்கள் அழிக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here