கடுகண்ணாவை ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியில் இருந்து பொல்கஹவெல நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ-கனத்தொட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியிலும் ரயிலில் மோதியதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற ரயிலில் மோதியே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








