திக்வெல்லவில் உள்ள தனது பள்ளியில் நீச்சல் குளத்தில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற 17 வயது மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தகவலின்படி, மாணவர் தனது வகுப்பு தோழர்களுடன் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து நீச்சல் குளத்தில் விழுந்தது.
அதை எடுக்க அவர் தண்ணீரில் இறங்கியபோது இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது.
உயிரிழந்தவர் திக்வெல்ல விஜித மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் தற்போது பதீகம மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








