கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 1000 ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் 34 வயதுடைய நபரொருவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 05 மில்லியன் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தனது சூட்கேஸில் பொதி செய்யப்பட்டிருந்த அழகுசாதனப் பொருட்களைக் கடத்த முற்பட்டதாகவும் ஓய்வறையில் இருந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த நபரும் , இந்தியாவின் மும்பையிலிருந்து வருகை தந்த சந்தேக நபரான வர்த்தகர் அடிக்கடி பயணிப்பவர் எனவும் சுங்க விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.








