யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் நடத்தும் வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கிய மென்பந்தாட்ட உள்ளூர் போட்டியானது (Kspl Season-5) நேற்று 16. 10. 2024 ஆரம்பமானது.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு தேசியக்கொடி மற்றும் கழகக் கொடியேற்றப்பட்டு விளையாட்டு கழக தலைவர் நோபட் கெனடி தலைமையில் காலை 9:00 மணியளவில் நிகழ்வு சென்மேரிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமானது.
ஆரம்பநாளின் முதல் போட்டியாக Lanka matha அணி மற்றும் Rising star அணி பலப்பரீட்சை நடாத்தியது .
மொத்தம் 7 அணிகள் மோதும் இந்த தொடரில் வடமராட்சி கிழக்கின் பல கழகங்களின் வீரர்களும் இணைந்து கொண்டு தமது ஆட்டத்தின் திறனை வெளிப்படுத்தவுள்ளதோடு இறுதி போட்டியில் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
நேற்றைய ஆரம்பநாள் நிகழ்வில் முள்ளியான் கிராம அலுவலர் கி.சிவகுமார் சென்மேரிஸ் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ம.வசந்தகுமார், கழக உறுப்பினர்கள், மூத்த உறுப்பினர்கள்,நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.








