கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 10 சந்தேக நபர்கள் தொடர்பான வழக்கை இன்று தொலைகாணொளி மூலம் விசாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான உத்தரவு கொழும்பு நீதிமன்றத்தின் பதிவாளருக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நீதிமன்றப் பதிவாளர் இது தொடர்பில் சிறை அதிகாரிகளுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது ஏற்படக்கூடிய பாதுகாப்பின்மையைக் கருத்திற் கொண்டு நீதவான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்வதற்கான துப்பாக்கியை நீதிமன்றத்திற்கு இரகசியமான முறையில் எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி இதுவரை கைது செய்யப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here