மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளியைச் சேர்ந்த  பிறவியிலேயே தனது இரு கண் பார்வையை இழந்த அல் ஹாபிழ் அப்துல்லாஹ்வை மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபையினர் மற்றும் மாவடிப்பள்ளி மக்கள் கௌரவித்தனர்.

மேலும் இந்த உலகத்தை நான் பார்க்கவில்லை என்றாலும் இந்த உலகம் என்னை பார்க்க வேண்டும்” என்ற ஒரு குறிக்கோளோடு  அல்-குர்ஆனை மனனம் இட்டு ஹாபிழாக பட்டம் பெற்றுள்ள அல்ஹாபிழ் அப்துல் அமீர் அப்துல்லாஹ் அவர்களை பாராட்டி , கௌரவிக்கும் நிகழ்வு இன்று (14.12.2024) மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலில்  ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து நம்பிக்கையாளர் சபையின் தலைவர் மனாப் ஆசிரியர் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர்கள் , உலமாக்கள், புத்தி ஜீவிகள், மசூரா சபை உறுப்பினர்கள் , நலன்விரும்பிகள் மற்றும் ஊர்மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

[அம்பாறை நிருபர் – முஹம்மத் மர்ஷாத்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here