சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உலோக கதவுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200,000-க்கும் அதிகமான சீன தயாரிப்பு சிகரெட்டுக்களை இலங்கை சுங்கம் கைப்பற்றியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட கொள்கலன் ஒன்றை பரிசோதித்தபோது, சுங்க வருவாய் பணிக்குழு அதிகாரிகளால் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த இந்த சிகரெட்டுக்கள் கதவுகளுக்குள் மிகவும் தந்திரமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் மதிப்பிடப்பட்ட சந்தை பெறுமதி 30 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை சுங்க வருவாய் பணிக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.








